பரப்புரை
பரப்புரை திருநெல்வேலி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் இன்று நாம் தமிழர் கட்சி சார்பாக பெற்றுக்கொள்ளப்பட்டது.திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 214957 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.இதில் இறந்தவர்கள் 83309இரட்டைப் பதிவு 12000இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் கண்டுபிடிக்க முடியாதவர்கள் என்று உள்ளவர்கள் 119648 பேர். இவர்கள் உண்மையில் இடம்பெயந்துள்ளனரா என்பதை தான் நாம் சரிபார்க்க வேண்டும்.திருநெல்வேலி மாவட்டத்தில் தொகுதி வாரியாக உள்ள பட்டியலையும் பகிர்ந்துள்ளேன்.இரண்டு தினங்களில் வரைவு வாக்காளர் பட்டியலை தருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளிவிடும் நாளில் வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு கொடுத்தால் சரிபார்க்க ஏதுவாக இருந்திருக்கும்.